தமிழ்நாடு

பட்டியலின மக்களை இழிவாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது : தனிப்படை போலிஸாரிடம் தற்கொலை மிரட்டல்!?

பட்டியலின மக்களை இழிவுபடுத்திப் பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

பட்டியலின மக்களை இழிவாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது : தனிப்படை போலிஸாரிடம் தற்கொலை மிரட்டல்!?
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தன்னை பிரபலமாகக் காட்டிக் கொள்வதற்கான நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து தனது சமூகவலைதளத்தில் சர்ச்சையாகப் பேசுவதை வழக்கமாக வைத்து வருகிறார் மீரா மிதுன்.

அந்தவகையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இந்த சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் திரை பிரபலங்கள்தான் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்தவேண்டும் எனவும் மிக இழிவாகப் பேசியுள்ளார்.

இவரது இந்தப் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மீரா மிதும் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்திருந்தன. இதில், வி.சி.க நிர்வாகி வன்னியரசு அளித்த புகாரின் பேரில் அடிப்படையில், மீரா மிதுன் மீது குற்றப்பிரிவு போலிஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.

ஆனால் அதன்பிறகும் மற்றொரு வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன், தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது. அப்படி நடந்தால் அது கனவில் தான் நடக்கும். பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று நான் சொல்லவில்லை. அந்த மக்களில் எனக்கு தொந்தரவு கொடுத்தவர்களையே தவறானவர்கள் என்று சொன்னேன்” என்று மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வண்ணம் பேசியிருந்தார்.

இந்நிலையில், மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜாராகாத நிலையில், அவரை கைது செய்ய போலிஸார் முடிவு செய்தனர். ஆனால் கைது நடவடிக்கை பயந்து, நடிகை மீரா மிதுன் கேரளாவிற்குச் சென்றுவிட்டதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மீரா மிதுனின் செல்போன் சிக்னல் வைத்து கேரளாவில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலிஸார் கைது செய்தனர். முன்னதாக கைது செய்யச் சென்ற தனிப்படை போலிஸாரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் மீரா மிதுன். மேலும் தன்னை கைது செய்தால் தற்கொலை செய்துக்கொள்வதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அவரை போலிஸார் கைது செய்து சென்னை அழைத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories