தமிழ்நாடு

"சிப்காட் முதல் மெட்ரோ ரயில் வரை" : பட்ஜெட்டின் அசத்தலான அறிவிப்புகளுக்கு திருப்பூர் மக்கள் வரவேற்பு!

நிதிநிலை அறிக்கையில் திருப்பூர் நகரத்திற்கான வளர்ச்சி திட்டங்களுக்கு திருப்பூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

"சிப்காட் முதல் மெட்ரோ ரயில் வரை" : பட்ஜெட்டின் அசத்தலான அறிவிப்புகளுக்கு திருப்பூர் மக்கள் வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், திருப்பூர் நகரத்தில் டைட்டில் பார்க் அமைக்கத் திட்டம், திறன் மேம்பாட்டிற்கு பயிற்சி நிலையம் அமைத்து உள்ளிட்ட திட்டங்கள் குறித்த அறிவிப்புகளுக்கு திருப்பூர் தொழில்துறையினர் மகிழச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் 2021-2022ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அப்போது, திருப்பூர் நகரில் பெருநகர் வளர்ச்சிக் கழகம் அமைப்பது, டைட்டில் பார்க் அமைக்கும் திட்டம், திறன் மேம்பாட்டிற்குப் பயிற்சி நிலையம், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், துணி நூல் துறைக்கு தனி இயக்குனரகம், மெட்ரோல் ரயில் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டு அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்புக்கு திருப்பூர் மக்களும், தொழில் துறையினரும் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேபோல், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று என்றும், இதன் மூலம் அந்த மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி அடையும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை திருப்பூர் மக்கள் கூறியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதை பலரும் வரவேற்றுப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories