தமிழ்நாடு

”11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னை வாசிகளுக்கும் நற்செய்திதான்” - தமிழ்நாட்டின் வானிலை நிலவரம்!

வங்கக்கடலில் 60 கிமீ வேகத்திலும் அரபிக்கடலில் 70 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

”11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னை வாசிகளுக்கும் நற்செய்திதான்” - தமிழ்நாட்டின் வானிலை நிலவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 12.08.2021: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நீலகிரி, தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய கூடும்.

13.08.2021: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய கூடும்.

14.08.2021: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய கூடும்.

15.08.2021: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.

16.08.2021: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

”11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னை வாசிகளுக்கும் நற்செய்திதான்” - தமிழ்நாட்டின் வானிலை நிலவரம்!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்:

12.08.2021,13.08.2021: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14.08.2021 முதல் 16.08.2021 வரை: தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரபிக்கடல் பகுதிகள்:

12.08.2021 முதல் 16.08.2021 வரை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories