தமிழ்நாடு

“33% வரை குறைந்த வருவாய்.. GSTயில் ரூ.20,000 கோடி பாக்கி”: தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!

தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து ஜி.எஸ்.டி வரி ரூபாய் 20,000 கோடி நிலுவைத் தொகை வரவில்லை என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

“33% வரை குறைந்த வருவாய்.. GSTயில் ரூ.20,000 கோடி பாக்கி”: தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலத்தின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையைத் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், “ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக விதிக்கப்படும் ரூ.32ல் ரூ.31.50யை ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கிறது. தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து ஜி.எஸ்.டி வரி ரூபாய் 20,000 கோடி நிலுவைத் தொகை வரவில்லை.

ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய மாநிலத்திற்கான வரி வருமானம் சரித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒருநாள் வட்டியாக ரூபாய் 87.31 கோடி செலுத்துகிறது. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி வரியை முறையாக வழங்கவில்லை.

2008-09ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.35% இருந்த நிலையில், தற்போது 8.7% சரிந்துள்ளது. வாகன வரி 15 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. அதேபோல் மின்சார வரியும் மாற்றப்படாமல் உள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து வந்துகொண்டிருந்த வருவாய் 33% குறைந்துவிட்டது. மாநில வருவாய் வளர்ச்சி 11.46% லிருந்து 4.4% சரிந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories