தமிழ்நாடு

“பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது” : உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி உருக்கம்!

பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது என உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.

“பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது” : உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கழக தொண்டர்கள் அவரின் திருவுருவப்படத்திற்கு மலர்துவி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திலும் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்ரில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டைப் பெற்றாலும், பாராட்டக் கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம்” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories