தமிழ்நாடு

“பொதுத்துறையை தொடர்ந்து சூறையாடும் மோடி அரசின் அடுத்த ‘பலி’?”: தனியார்மயமாகும் ராணுவ தளவாட உற்பத்தி துறை!

ராணுவ தளவாட துறையை தனியாருக்கு தாரைவார்க்க வகை செய்யும் அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு மசோதா மோடி அரசால் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற்றப்பட்டுள்ளது.

“பொதுத்துறையை தொடர்ந்து சூறையாடும் மோடி அரசின் அடுத்த ‘பலி’?”: தனியார்மயமாகும் ராணுவ தளவாட உற்பத்தி துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிப்புக்காக நாடு முழுவதிலும் ஒன்றிய அரசின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயுதங்கள் தயாரிப்பு, 1775-ல் ஆங்கிலேயரால் கொல்கத்தாவில் முதலாவதாக துவக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் ஊட்டியின் அரவங்காடு மற்றும் சென்னையின் ஆவடி, உ.பி.யின் கான்பூர், ஒடிசாவின் பொளங்கீர், ம.பி.யின் ஜபல்பூர் உள்ளிட்ட 41 இடங்களில் இந்த தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இவற்றை நிர்வாகிக்க ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித்துறையின் கீழ் இயங்கும் இதை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நிர்வகிக்கிறது. இவற்றில் கடந்த 4 வருடங்களுக்கு முன் ஆயுதங்கள் உற்பத்தியில், “குறிப்பிட்ட தயாரிப்புகள் மட்டுமே’ எனும் வகையான ஒரு கொள்கை உருவாக்கப்பட்டது.

இதனால், பெரும்பாலான தொழிற் சாலைகளில் நடைபெற்று வந்த பல முக்கிய ஆயுதங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன்மூலம், சுமார் 20,000 கோடி ரூபாயாக இருந்த இந்த தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதியாகக் குறைந்து வருகிறது. இதன் பின்னணியில் அந்த தொழிற்சாலைகளை முதலில் பொது நிறுவனங்களாக மாற்றிபிறகு, தனியார் பெருநிறுவனங்களிடம் தாரைவார்ப்பது ஒன்றிய அரசின் திட்டம் என கூறப்படுகிறது.

“பொதுத்துறையை தொடர்ந்து சூறையாடும் மோடி அரசின் அடுத்த ‘பலி’?”: தனியார்மயமாகும் ராணுவ தளவாட உற்பத்தி துறை!

அதன்படியே தற்போது, ராணுவ தளவாட துறையை தனியாருக்கு தாரைவார்க்க வகை செய்யும் அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு மசோதா, நடுவர் மன்றங்கள் சீர்திருத்தங்கள் மசோதா, திவால் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மோடி அரசால் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் நேற்றையதினம் கேள்வி நேரத்தின் போது, அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு சட்ட முன்வடிவு 2021 எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டமுன்வடிவு, இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டத்தை மாற்றுகிறது. இந்தச் சட்டம் ஓராண்டுக்குத்தான் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பின்னர் இந்தச் சட்டமுன்வடிவு குரல்வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல், மாநிலங்களவையில் கேள்விநேரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கு இடையே திவால் சட்டத்திருத்தச் சட்டமுன்வடிவு 2021 விவாதத்திற்காகவும் நிறைவேற்றுவதற்காகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் இந்தச்சட்டமுன்வடிவு குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு சிறுதுளியும் மதிப்பு அளிக்காமல், தங்களுக்கு ஏற்றார் போல் அரசியல் அமைப்பு சட்டத்தை மோடி அரசாங்கம் மாற்றி அமைத்து வருகிறது. அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“பொதுத்துறையை தொடர்ந்து சூறையாடும் மோடி அரசின் அடுத்த ‘பலி’?”: தனியார்மயமாகும் ராணுவ தளவாட உற்பத்தி துறை!

அதுமட்டுமல்லாது, மோடி அரசின் இத்தகைய நடவடிக்கை எதிராக ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலைகளை பணிபுரியும் ஊழியர்கள் அரசு இந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் என வலியுறுத்தி தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், போராடும் தொழிலாளர்களை ஒடுக்கும் விதமாக ஒன்றிய அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் படி, ஊழியர்கள் போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்பட்டு ஓராண்டு வரை சிறையிலடைக்கப்படுவார்கள்.

பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம். பிணை கிடையாது. போராட்டதை தூண்டினால் உடனடி பணி நீக்கம், 2 ஆண்டு வரை சிறை தண்டணை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தின் மூலம் தொழிற்சங்க தலைவர்களையும், ஊழியர்களையும் ஒன்றிய அரசு ஒடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் இந்த அடக்குமுறை சட்டத்துக்கு எதிராக ஜூலை 23 ஆம் தேதி நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories