தமிழ்நாடு

“இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற குழு இல்லை” : முதல்வருக்கு ‘ஜெர்மனி’ நாளேடு பாராட்டு!

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற குழு இல்லை என்று பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருப்பதை ஜெர்மனியைச் சேர்ந்த ‘தி ஃப்ராங்க்பர்ட்டர் அல்ஜெமின் ஜெய்துங்’ என்ற நாளேடு பாராட்டியுள்ளது.

“இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற குழு இல்லை” : முதல்வருக்கு ‘ஜெர்மனி’ நாளேடு பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் முதலமைச்சருக்கு பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை கூற நிபுணர் குழு அமைக்கப்பட்டிருப்பதை ஜெர்மனியைச் சேர்ந்த ‘தி ஃப்ராங்க்பர்ட்டர் அல்ஜெமின் ஜெய்துங்’ (The Frankfurter Allgemeine Zeitung) என்ற நாளேடு பாராட்டியுள்ளது. இந்த நாளேடு 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழக முதல்வருக்கு ஆலோசனை கூற ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலாளர் நாராயணன், பேராசிரியர் ஜீன் ட்ரஸ் ஆகியோர் கொண்ட குழு அண்மையில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதைப் பாராட்டி எழுதப்பட்ட கட்டுரையில், தமிழ்நாட்டில் தி.மு.க அரசு சீர்திருத்த முயற்சிகளில் ஒரு பகுதியாக பொருளாதார நிபுணர் குழு அமைத்துள்ளதாக ஜெர்மன் நாளேடு பாராட்டியுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற குழு இல்லை என்றும் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனின் பொருளாதாரப் படிப்புகள் குறித்த விவரமும், அமெரிக்காவில் அவர் ஆற்றிய பணிகளும் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories