தமிழ்நாடு

“சிறுகச் சிறுக நகையைத் திருடி புதிய கடையைத் திறந்த ஊழியர்” : போலிஸில் அதிர்ச்சி புகார்... நடந்தது என்ன?

சென்னையில் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் சிறுகச் சிறுக நகைகளைத் திருடி, புதிதாக ஒரு நகை கடையையே தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சிறுகச் சிறுக நகையைத் திருடி புதிய கடையைத் திறந்த ஊழியர்” : போலிஸில் அதிர்ச்சி புகார்... நடந்தது என்ன?
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த நம்மாழ்வார் பேட்டை ஒத்தவாடை தெருவில் உள்ள சுகன் ராஜ்மேத்தா கோல்டு ஹவுஸ் நகைக்கடை. இந்தக் கடையை ரஞ்சித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து நடத்தி வருகிறார்கள்.

ரஞ்சித்குமாரின் தந்தை காலத்திலிருந்தே இவர்களுக்கு நகைக்கடையில் அனுபவம் உள்ளது. மேலும் 40 வருடங்களாக நகைக்கடை நடத்தி வருகிறது இவர்களது குடும்பம்.

இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானைச் சேர்ந்த வீரேந்தர் என்பவர் ரஞ்சித்குமார் நகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். பின்னர் நாளடைவில் வீரேந்தர், ரஞ்சித் குமாரின் குடும்ப உறுப்பினர் போன்று பழகிவந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நகைக்கடையில் சில நாட்களாக பொதுமக்கள் அடகு வைக்கும் நகைகள் குறைவதை ரஞ்சித் கண்டுபிடித்துள்ளார். மேலும் வீரேந்தர் மீதும் அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனை உறுதிபடுத்துவதற்காக, வீரேந்தரிடம் அடகு வைத்த நகைகள் எனக் கூறி சில நகைகளைக் கொடுத்துள்ளார். இதை வீரேந்தர் லாக்கரில் வைத்துள்ளார். பிறகு சில நாட்கள் கழித்து லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் ஒரு நகையைக் காணவில்லை.

“சிறுகச் சிறுக நகையைத் திருடி புதிய கடையைத் திறந்த ஊழியர்” : போலிஸில் அதிர்ச்சி புகார்... நடந்தது என்ன?
Kondor83

இது குறித்து ரஞ்சித்குமார், வீரேந்தரிடம் கேட்டபோது, தாம் மாட்டிக்கொண்டதை உணர்ந்து நகையை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் வீரேந்தர் கூறியதைக் கேட்டு ரஞ்சித்குமார் அதிர்ச்சியடைந்தார்.

கடந்த பல வருடங்களாக சிறுகச் சிறுக கடையிலிருந்த நகைகளைத் திருடியதாகவும், இப்படி சுமார் 25 லட்சம் மதிப்பில் தங்கம், வெள்ளி நகைகளை திருடியதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த நகையை கொண்டு தனது சகோதரர் ரத்தன் பட்டேலுடன் சேர்ந்து கொளத்தூரில் புதிதாக நகைக்கடை நடத்தி வருவதாகவும் வீரேந்தர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரஞ்சித்குமாரின் குடும்பத்தினர் திருடப்பட்ட நகையை திருப்பி கொடுத்துவிட்டால் போலிஸில் புகார் செய்ய மாட்டோம் என கூறியுள்ளனர். இதற்கு வீரேந்தரும் உடன்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகியும் இதுவரை வீரேந்தர் நகைகளை திருப்பித் தராமல் இருந்துள்ளார். இதுகுறித்து ரஞ்சித்குமார் கேட்டபோது அடியாட்களை வைத்து, கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் ரஞ்சித் குமார் அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories