தமிழ்நாடு

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பாமக நிர்வாகிகள்!

10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்தி அரசாணை வெளியிட்டதற்காக பா.ம.க நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பாமக நிர்வாகிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்தி அரசாணை வெளியிட்டதற்காக சென்னை தலைமை செயலகத்தில் பா.ம.க தலைவர் ஜி.கே மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், வெங்கடேசன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, “10.5% இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்த சட்டத்தை முதலமைச்சர் நிறைவேற்றி இருப்பது பாராட்டகுரியது” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், பொறியியல் மாணவர் சேர்க்கையில் 10.5% குறித்து எந்த அறிவிப்பும் வராததால், நேற்று பா.மக.விற்கு நெருக்கடியான நாளாக கருதப்பட்டதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் அரசாணை வெளியிட்டிருப்பதாக தெரிவித்தார்.

10.5% இட ஒதுக்கீட்டால் பிற்படுத்தபட்டோர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

கடந்த ஆட்சியில் 10.5% இட ஒதுக்கீடு சட்டம் சட்டபேரவையில் இயற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டது, ஆனால் அதில் சட்ட சிக்கல் இருப்பதாக கூறி சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தியதாக கூறினார்.

banner

Related Stories

Related Stories