தமிழ்நாடு

“தடுப்பூசி கொள்முதலை அதிகரிக்க வேண்டாமா?” : கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதில் சுணங்கும் மோடி அரசு!

இந்தியாவில் கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி கொள்முதலை ஒன்றிய அரசு அதிகரிக்க வேண்டும் என ‘தினகரன்’ நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

“தடுப்பூசி கொள்முதலை அதிகரிக்க வேண்டாமா?” : கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதில் சுணங்கும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தினகரன் நாளேட்டின் இன்றைய (ஜூலை 26, 2021) தலையங்கம் வருமாறு:

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் கொரோனா 3ஆம் அலை குறித்த அச்சம் எல்லோருக்குமே இருக்கிறது. அடுத்த அலையை எதிர்கொள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என ஒன்றிய அரசு உறுதியாக கூறி வருகிறது. ஆனால் தடுப்பூசிகள் பற்றாக்குறை நாடு முழுவதுமே காணப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 42 ேகாடியே 96 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் முதல் டோஸ் 33 கோடியே 79 லட்சத்து 52 ஆயிரத்து 177 பேருக்கு போடப்பட்டுள்ளது. இரண்டாம் டோஸ் 9 கோடியே 17 லட்சத்து 2 ஆயிரத்து 195 பேருக்கு போடப்பட்டுள்ளது.

வரும் டிசம்பருக்குள் 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும் என ஒன்றிய அரசு கூறிவருகிறது. ஆனால், நாள் ஒன்றுக்கு சராசரியாக 36 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டு வருகின்றன. இதை கணக்கில் கொண்டு பார்த்தால் இந்தியாவில் மீதமுள்ள 90 கோடி பேருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க ஓராண்டு கூட ஆகலாம். தடுப்பூசிகள் தட்டுப்பாடு என்பது இந்தியாவில் இப்போது தலையாய பிரச்னையாக உள்ளது. சுகாதார வளர்ச்சி பெற்ற தமிழகம் போன்ற மாநிலங்களில் கூட தடுப்பூசிகள் தேவைக்கேற்ப கிடைப்பதில்லை. ஒன்றிய அரசின் குறைவான ஒதுக்கீடு காரணமாக தடுப்பூசிகளை போட முடியாமல் பலர் திண்டாடி வருகின்றனர். ஒன்றிய அரசு பரிந்துரைத்த கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட இரு தடுப்பூசிகளுமே பல மாநிலங்களில் தட்டுப்பாடாக உள்ளது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கோவாக்சின் தடுப்பூசிகள் தேவைக்கேற்ப கிடைப்பதில்லை. அதில் முதல் டோஸ் செலுத்திவிட்டு, இரண்டாம் டோஸ் கேட்டு காத்திருப்போர் ஏராளம். இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 69 லட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தினமும் மருத்துவமனைகளுக்கு அலைந்து திரிந்து ஏமாற்றத்தோடு திரும்ப வேண்டிய கட்டாயமும் உள்ளது. மக்கள் தொகை மிகுந்த இந்தியா போன்ற நாடுகளில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்.

ஆனாலும் பொதுமக்களின் தேவையறிந்து தடுப்பூசிகளை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமையாகும். இந்தியாவில் கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி கொள்முதலை ஒன்றிய அரசு அதிகரிக்க வேண்டும். மாநிலங்கள் தோறும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை இப்போதிருந்தே ஒன்றிய அரசு உறுதிப்படுத்திட வேண்டும்.

banner

Related Stories

Related Stories