தமிழ்நாடு

“வரைவு ஒளிப்பதிவு மசோதாவிற்கு என்ன அவசியம்?” : ஒன்றிய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த தயாநிதி மாறன் !

வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவிற்கான காரணம் மற்றும் அவசியம் குறித்த விவரங்கள் பற்றி தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.

“வரைவு ஒளிப்பதிவு மசோதாவிற்கு என்ன அவசியம்?” : ஒன்றிய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த தயாநிதி மாறன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவிற்கான காரணம் மற்றும் அவசியம் குறித்த விவரங்கள் பற்றி தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.

அதன் விவரம்வருமாறு :

• வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவினை தாக்கல் செய்யும் எண்ணம் அரசுக்கு உள்ளனவா? எனில் அதன் விவரங்கள் மற்றும் அதற்கான காரணத்தைத் தெரியப்படுத்தவும்,.

• ஒன்றிய திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழை பெற்று வெளியாகும் திரைப்படங்களை மறுபரிசீலனை செய்யும் விதி முறைகள் உள்ளனவா? எனில் அதன் விவரம் மற்றும் நீக்கம் குறித்து தெரியப்படுத்தவும்.

• இந்த சட்ட மசோதாவை திருத்தம் செய்வதற்கு இத்துறைச் சார்ந்த பிரதிநிதிகளிடம் அரசாங்கம் ஆலோசனை மேற்கொண்டனவா? - எனில் அதன் விவரம் குறித்தும் இத்துறைச் சார்ந்தவர்களின் பதில்கள் என்ன என்பதனையும் தெரியப்படுத்தவும்.

• திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை ஒன்றிய அரசு கலைத்து விட்டனவா? - எனில் அதற்கான காரணம் மற்றும் விவரம் குறித்து தெரியப்படுத்தவும்.

• கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிரமத்தினால் பாதிக்கப்பட்ட திரைத் துறையைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு செய்த உதவிகள் மற்றும் வகுத்த திட்டங்கள் என்ன என்பதனையும் தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories