தமிழ்நாடு

சமூக சம நீதிக்கான அரசு என்பதை மீண்டும் நிரூபித்த தி.மு.க - சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி மாற்றம்!

சமூக சம நீதிக்கான அரசு என்பதை மீண்டும் நிரூபித்த தி.மு.க - சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி மாற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி சமீப காலமாகச் சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு பல சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தி வருகிறார்.

பதிவுத்துறைச் செயலர் மற்றும் பதிவுத்துறைத் தலைவருடன் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சென்ற வாரம் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டபோது பதிவு அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் உயர்ந்த மேடையில் அமர்ந்து பதிவுப் பணி செய்து வருவதால், பொது மக்களை மரியாதையுடன் நடத்தி அவர்களுக்கு பதிவுச் சேவையினை வழங்குவது சிரமமாக உள்ளது கண்டறியப்பட்டது.

சமூக சம நீதிக்கான அரசு என்பதை மீண்டும் நிரூபித்த தி.மு.க - சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி மாற்றம்!

எனவே, இனிவரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பதிவுப் பணியினைச் செய்ய வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். சார்பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்கப்பட்ட நிலையிலும் அரசுக்குச் செலுத்தும் கட்டணங்கள் யாவும் இணைய வழியாகவே செலுத்தப்படுவதால் சார்பதிவாளர்கள் பணத்தைக் கையாள வேண்டிய அவசியமில்லாத நிலையிலும் இந்த உயர் மேடைகள் தற்போது தேவையில்லை என்பதால் பதிவு அலுவலர்களின் இருக்கையினைச் சமதளத்தில் அமைத்து சுற்றியுள்ள தடுப்புகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு வெளிப்படையான சேவையினை உறுதிசெய்யும் வகையில் சார்பதிவாளர்கள் தாங்கள் அமர்ந்துள்ள மேடையினைச் சுற்றியுள்ள தடுப்பினை உடனடியாக அகற்றி தங்கள் இருக்கையினைச் சமதளத்தில் அமைக்க வேண்டும் எனப் பதிவுத்துறைத்தலைவர் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories