தமிழ்நாடு

நிதி நிறுவனம் பேரில் ₹600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!

கும்பகோணத்தில் பா.ஜ.க வை சேர்ந்த நிதிநிறுவன அதிபர்கள் வீட்டில் இருந்து 12 சொகுசு கார்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்

நிதி நிறுவனம் பேரில் ₹600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Jana Ni
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள். பா.ஜ.க வை சேர்ந்த இருவரும் நிதி நிறுவனம் என்ற பெயரில் பொதுமக்கள் ஏராளமானோரிடம் , பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ₹600 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கும்பகோணம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

நிதி நிறுவனம் பேரில் ₹600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Jana Ni

இதையடுத்து அவர்கள் இருவர், மற்றும் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ரகுநாதன், மீரா, ஸ்ரீதர் ஆகியோர் மீதும் 120 பி, 406, 420 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் நிதி நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றிய ஸ்ரீகாந்த் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில் திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகன் தலைமையில் எஸ்பி தனிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீசார் ஸ்ரீநகர் காலனியில் உள்ள கணேஷ் , சாமிநாதன் வீட்டில் இருந்த 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்..

banner

Related Stories

Related Stories