தமிழ்நாடு

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மூலம் ரூ.3.35 லட்சம் கோடி லாபம் பார்த்த ஒன்றிய அரசு.. அதிர்ச்சி ரிப்போர்ட்!

2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து கிடைக்கும் கலால் வரி ரூ. 3.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மூலம் ரூ.3.35 லட்சம் கோடி லாபம் பார்த்த ஒன்றிய அரசு.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் விரோதமான அரசாகவே செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக ஏழை எளிய, நடுத்தர குடும்பத்தினர் பயன்படுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ஏற்றிக்கொண்டே வருகிறது.

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை வரலாறு காணாத வகையில் ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக விதிக்கப்பட்ட கலால் வரி மூலம் ரூ. 3.35 லட்சம் கோடி ரூபாயை ஒரே ஆண்டில் வசூலித்துள்ளது.

அதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டில், கொரோனா கொள்ளைக்கு இடையிலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு கடுமையாக உயர்த்தியது. பெட்ரோல் மீதான கலால் வரி, லிட்டருக்கு 19.98 ரூபாயில் இருந்து 32.90 ரூபாயாகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 15.83 ரூபாயிலிருந்து 31.08 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மூலம் ரூ.3.35 லட்சம் கோடி லாபம் பார்த்த ஒன்றிய அரசு.. அதிர்ச்சி ரிப்போர்ட்!

இதன் காரணமாக பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி மூலமான வருவாய் ஒரே ஆண்டில் 88 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க அரசே இதுதொடர்பான புள்ளிவிவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதில், “கடந்த 2019-20 நிதியாண்டில் பெட்ரோல் - டீசல் மூலமான வரி வருவாய் ரூ. 1.78 லட்சம் கோடியாக மட்டுமே இருந்த நிலையில், வரியை உயர்த்தியதால் சென்ற ஆண்டில் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. அதாவது, 2020-21 நிதியாண்டில் ரூ.2.13 லட்சம் கோடி கிடைத்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் மட்டும் பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி வசூல் ரூ.1.01 லட்சம் கோடி கிடைத்துள்ளது.

அதேபோல், எண்ணெய் மீதான விலை அதிகரிப்பு காரணமாக, 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து கிடைக்கும் கலால் வரியானது ரூ. 3.35 லட்சம் கோடியாக இருந்துள்ளது. இது 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்கு வசூல் ஆகும் என்பது குறிப்பிடத்தகது.

banner

Related Stories

Related Stories