தமிழ்நாடு

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தால் ‘வேலையற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு; தேர்வெழுத பயிற்சி வகுப்பு’!

 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தால் ‘வேலையற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு; தேர்வெழுத பயிற்சி வகுப்பு’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’’ திட்டத்தில் வேலையில்லாதவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மேலும் பலர் போட்டித் தேர்வு எழுத பயிற்சி வகுப்புகளில் ஆன்லைனில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்ட மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை வருமாறு:-

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த திருநங்கை ஜி.அசீனா என்பவர் சில மாதங்களுக்கு முன்பு வரை தனது அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கு சிறு சிறு வேலைகளைச் செய்துவர வேண்டியிருந்தது. ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ எனும் திட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 31 வயதான இவர், தற்பொழுது அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார்.

பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் அசீனா!

"நான் ஒரு புகார் மனு கொடுத்தேன். உடனே அரசு அலுவலர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு, எனது கல்வித் தகுதிக்கேற்ப நான் என்ன செய்யலாம் என கலந்தாய்வு செய்து கருத்துக் கூறினர். அதன்படி இப்போது நான் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். வருங்காலத்தில் அரசுத் தேர்வுகள் எழுதுவேன்’’ என நம்பிக்கையுடன் அவர் கூறினார்.

தொலைத் தொடர்பு நிறுவனத்தில் வேலை பெற்றுள்ள சதீஷ்!

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ எனும் திட்டத்தின் இன்னொரு பயனாளி, சென்னையைச் சேர்ந்த 24 வயதுடைய சதீஷ் என்பவராவார். அவர் "நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலையை இழந்தேன். எனது விவரங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எனக்கு வேலைவாய்ப்பு வேண்டி, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன். இப்போது ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் எனக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்று கூறினார்.

போட்டி தேர்வுகள் எழுத 6757 பேர் பயிற்சி!

இத்திட்டத்தின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறுகையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த காலத்தில் வேலை வாய்ப்பு வேண்டி பொதுமக்களிடமிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுக்கொண்ட விண்ணப்பங்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விண்ணப்பங்கள் அளித்த 67757 பேர்களில் 224 பேர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள அதே நேரத்தில் 6757 பேர் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கான வகுப்புகளில் இணையதள வாயிலாகப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

கல்வித் தகுதி-வயது அடிப்படையில் கலந்தாய்வு - மாற்றுவழிகள்!

பணிகள் முன்னேற்றமடைந்து வருகின்றன. மாவட்ட அலுவலர்கள் வாயிலாக ஒவ்வொரு விண்ணப்பதாரரையும் அரசு அணுகி ஆவன செய்கிறது. பல விண்ணப்பங்களில் / மனுக்களில் தொடர்பு எண்களே குறிப்பிடப்படவில்லை. இத்தகையவர்களுக்கென விரைவில் ஓர் ஏற்பாடு செய்யப்படும். அதன்படி இந்த விண்ணப்பதாரர்கள் இணையதள வகுப்பு வசதியைப் பெறவும், தொடர்பு விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.’’ "ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அவரது கல்வித் தகுதி, வயது ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வு மூலமாக ஆலோசனையும் உரிய மாற்று வழிகளும் தெரிவிக்கப்படுகின்றன’’ எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories