தமிழ்நாடு

"ATMல் பணம் எடுக்கத் தெரியாதவர்களே டார்கெட்"... நூதன கொள்ளையன் சிக்கியது எப்படி?

ATM மையத்திற்குப் பணம் எடுக்க வருபவர்களை ஏமாற்றிப் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

"ATMல் பணம் எடுக்கத் தெரியாதவர்களே டார்கெட்"... நூதன கொள்ளையன்  சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டம், கருக்காம் பட்டியைச் சேர்ந்த ஒமன்த். முதியவரான இவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கத் தெரியாததால், அருகிலிருந்தவரிடம் பணம் எடுத்துத் தருமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த நபரும் ஏ.டி.எம்-ல் இருந்து ரூபாய் 5 ஆயிரத்தை எடுத்து ஓமன்த்திடம் கொடுத்துள்ளார். மேலும் ஓமன்த் தொடுத்த ஏ டி எம் கார்டுக்கு பதிலாக வேறு போலியான காடை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

பிறகு மீண்டும் முதியவர் ஓமன்த் பணம் எடுக்க முயன்றபோது, அவரால் பணம் எடுக்க முடியவில்லை. உடனே அருகே இருந்த வங்கிக்குச் சென்று இது குறித்துக் கேட்டுள்ளார். பின்னர் ஏ.டி.எம் கார்டை பரிசோதித்ததா வங்கி நிர்வாகிகள் இது உங்கள் ஏ.டி.எம் கிடையாது என கூறியதைக் கேட்டு ஓமன்த் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும், ஓமன்த் ஏ.டி.எம்ஏ டி எம் கார்டைப் பயன்படுத்திக் கொண்டு 65 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த மர்ம நபர் திருடியது தெரியவந்தது. பின்னர் அறிந்த ஒமன்த் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

"ATMல் பணம் எடுக்கத் தெரியாதவர்களே டார்கெட்"... நூதன கொள்ளையன்  சிக்கியது எப்படி?

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர். பிறகு, நாகம்பட்டு ஏ.டி.எம். முன்பு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த பாலா என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கத் தெரியாதவர்களைக் குறிவைத்து கொள்ளை அடித்து வந்ததா பாலா வாக்கு மூலம் கொடுத்தார்.

இதையடுத்து அவரிடமிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் நான் ஏ.டி.எம் காடுகளை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories