தமிழ்நாடு

பாட புத்தகங்களிலும் ஒன்றிய அரசு என மாற்ற நடவடிக்கை - திண்டுக்கல் ஐ.லியோனி தகவல்!

வரும் கல்வி ஆண்டில் பாட புத்தங்களில் மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு என்று மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளர்.

பாட புத்தகங்களிலும் ஒன்றிய அரசு என மாற்ற நடவடிக்கை - திண்டுக்கல் ஐ.லியோனி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி இன்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்துப் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் லியோனி, மாணவர்கள் பாடங்களை படிப்பதற்கும் கல்வியை சிரமமில்லாமல் படிப்பதற்கும் புதிய கல்வியாக சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது முத்தமிழறிஞர் கலைஞர்தான் .

தற்போது இந்த பாடங்களில் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாட புத்தங்கள் கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

வரும் கல்வியாண்டில் பாடநூல்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக ஒன்றிய அரசு என்று மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories