தமிழ்நாடு

“Audi A6 தான் இருக்கு.. சொகுசு கார் இல்லை.. எங்களுக்கு வருமானமே இல்லை” : ஆபாச Youtuber மதன் மனைவி கதறல்!

தடை செய்யப்பட்ட விளையாட்டை தனது கணவர் விளையாடவில்லை என்றும், 20 மணி நேரம் உழைத்து பணம் சம்பாதித்ததாகவும் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.

“Audi A6 தான் இருக்கு.. சொகுசு கார் இல்லை.. எங்களுக்கு வருமானமே இல்லை” : ஆபாச Youtuber மதன் மனைவி கதறல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தனது கணவர் மீதும் தன் மீதும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முறையான ஆதாரங்கள் இல்லை என பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து ஆபாசமாக தனது யூ-டியூப் சேனலில் பேசியதாக யூ-டியூபர் பப்ஜி மதன் மத்திய குற்றப்பிரிவு போலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதனின் மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு பின் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கைது செய்யப்பட்ட எனது கணவர் மதன் மீது எதிர்மறையான கருத்துகள் பரவி வருகிறது. அதுகுறித்து விளக்கவே பேட்டியளிக்கிறேன். எனது கணவர் மதன் தடை செய்யப்பட்ட விளையாட்டான பப்ஜி-யை விளையாடியதாக கூறுகின்றனர். இந்தியாவில் சீன வெர்ஷன் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. எனது கணவர் விளையாடியது கொரியன் வெர்ஷன்.

மதன் மீது 150-200 புகார்கள் வந்துள்ளதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது முற்றிலும் தவறு. நாங்கள் விசாரித்ததில் 4 நபர்கள் மட்டுமே மதன் மீது புகார் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக மதன் எந்தவிதமான சொகுசு பங்களாக்களும் வாங்கவில்லை. இதுவரை நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். அந்த வீட்டின் சாவியும் தற்போது போலிஸாரிடம்தான் உள்ளது.

எங்களிடம் எந்த சொகுசு காரும் இல்லை. ஆடி ஏ6 கார் மட்டுமே எங்களிடம் உள்ளது. எனது கணவர் மதன் ஒரு நாளில் 20 மணி நேரம் உழைத்து வீடியோ வெளியிட்டதன் மூலமாகவே சம்பாதித்தார், வேறு எந்த வருமானமும் எங்களுக்கு இல்லை.

யூ-டியூப் சேனலோடு எனது வங்கி கணக்கை இணைத்துள்ளதால் மட்டுமே நான் கைது செய்யப்பட்டேன். மதனின் யூ-டியூப் சேனலில் ஒரு முறைகூட நான் பேசியதில்லை.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இதுவரை தனது கணவர் மதன் யாரிடமும் பணம் வாங்கி ஏமாற்றவில்லை எனவும், அதற்கான ஆதாரம் இருந்தால் போலிஸார் தங்களுக்கு தெரிவிக்குமாறும் கூறிய அவர், மதன் யூ-டியூப்பில் வீடியோவை பதிவிட்டதன் மூலமாக சம்பாதித்த பணத்தை மட்டுமே பயன்படுத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories