தமிழ்நாடு

“மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு” : அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

தனியார் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் கட்டண நிர்ணய சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

“மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு” : அமைச்சர் அன்பில் மகேஷ்  விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீட் தேர்வு குறித்து அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளித்த உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இது குறித்து அறிவிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவும் என எதிர்பார்க்கக் கூடிய நிலையில், மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். மேலும் மருத்துவர்களின் கருத்துகளின் அடிப்படையிலும், பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்குத் தயாரான சூழல் இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முடிவு எடுக்கப்படும்.

நீட் தேர்வு குறித்து அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளித்த உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இது குறித்து அறிவிப்பார். தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணய சுற்றறிக்கை ஓரிரு நாட்களில் பள்ளிக் கல்வி துறை மூலம் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories