தமிழ்நாடு

“அணில் ஓடியதால் மின்கம்பிகள் உரசி மின்தடை” : டிரான்ஸ்பார்மர் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள்! (வீடியோ)

திருப்பூரில் டிரான்ஸ்பார்மரில் மேல் அணில் ஏறியதால் மின்தடை ஏற்பட்டதைமின் ஊழியர்கள் சரி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

“அணில் ஓடியதால் மின்கம்பிகள் உரசி மின்தடை” : டிரான்ஸ்பார்மர் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏற்படுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அதனை சரி செய்யும் பணியில் தி.மு.க அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்றும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது படுவதால் அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் மின் கம்பிகளில் ஏறி 2 மின் கம்பிகளும் உரசிக்கொள்வதால் மின்தடை ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மின்தடை குறித்த அமைச்சர் செந்தில் பாலாஜியில் கருத்தை தவறாக சித்தரித்த அ.தி.மு.க., பா.ஜ.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதுதொடர்பாக பல்வேறு அவதூறுகளையும் தெரிவித்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக உரிய ஆதாரங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்தபோதும் உண்மையை ஏற்க மறுத்து தொடர்ந்து இந்த விவகாரங்களை சர்ச்சையாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் மின்தடை ஏற்படும்போது பராமரிப்பு பணியில் ஈடுபடும் மின்ஊழியர்கள் அணில்களால் மின்தடை ஏற்பட்டிருப்பின் அதனை வீடியோவாக எடுத்து உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்தவகையில், திருப்பூரில் டிரான்ஸ்பார்மரில் மேல் அணில் ஏறியதால் மின்தடை ஏற்பட்டதைமின் ஊழியர்கள் சரி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை பகுதியில், இன்று மதியம் டிரான்ஸ்பார்மரில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. பின்னர், உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து டிரான்ஸ்பார்மரில் சோதனை செய்தனர்.

அப்போது, டிரான்ஸ்பார்மரில் இருக்கும் டிப்பரில் அணில் ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். பின்னர் அணிலை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு மின் இணைப்பை சரி செய்தனர். தமிழகத்தில் அணில்களால் மின் தடை ஏற்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த சூழ்நிலையில், தற்பொழுது திருப்பூரில் அணில் டிரான்ஸ்பார்மரில் ஏறியதால் மின்தடை ஏற்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories