தமிழ்நாடு

'பேராசிரியர் வேலை வாங்கி தர்றேன்' : ஓ.பி.எஸ் பெயரில் கட்சிக்காரரிடமே அதிமுக நிர்வாகி ரூ. 30 லட்சம் மோசடி!

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரைப் பயன்படுத்தி பெண் நிர்வாகி மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

'பேராசிரியர் வேலை வாங்கி தர்றேன்' : ஓ.பி.எஸ் பெயரில் கட்சிக்காரரிடமே அதிமுக நிர்வாகி ரூ. 30 லட்சம் மோசடி!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். அ.தி.மு.க நிர்வாகியான இவரிடம் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரைப் பயன்படுத்தி அரசுக் கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கித் தருவதாக நெல்லை தெற்கு மாவட்ட அ.தி.மு.க மகளிர் அணி செயலாளர் சௌர்ணா கூறியுள்ளார்.

இவரின் பேச்சை நம்பி அய்யப்பன், சௌர்ணாவிடம் ரூபாய் 30 லட்சத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் பேராசிரியர் பணி வாங்கித் தரவில்லை. இதையடுத்து கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு அய்யப்பன் சௌர்ணாவிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் பணம் தரமறுத்துள்ளார்.

இது குறித்து அய்யப்பன் ஓ.பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் புகார் கூறியுள்ளார். தனது பெயரைப் பயன்படுத்தி மோசடி நடந்ததை அறிந்த பிறகும் ஓ.பன்னீர்செல்வம் போலிஸில் புகார் கொடுங்கள். பணம் கொடுத்தவர்களிடம் தானே கேட்க வேண்டும் என அலட்சியமாகப் பதில் அளித்துள்ளார். கட்சி நிர்வாகியின் மோசடி பற்றி புகார் அளித்த கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரிடமே ஓ.பி.எஸ். அலட்சியமாகப் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories