தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் இரண்டு டெல்டா பிளஸ் பரிசோதனை மையங்கள்": அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் இரண்டு டெல்டா பிளஸ் பரிசோதனை மையங்கள்": அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கோட்டூர்புரத்தில் குடிசை மாற்று வாரியம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்திளார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்," தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அதேபோல் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை இரண்டு லட்சம் வரை தடுப்பூசி கையிருப்பு உள்ளது.

மேலும், ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து நாளைக்குள் தடுப்பூசிகள் கிடைக்கும் . தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் மையங்கள் இரண்டு இடங்களில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல், இதுவரை செலுத்தியதிலேயே அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாத தொகுப்பில் ஒன்றிய அரசு எழுபத்து ஒரு லட்சம் தடுப்பூசிகளைக் கொடுப்பதற்கு முன் வந்து இருக்கிறது. அதில் 10 லட்சம் தடுப்பூசிகள் தற்போது கிடைத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories