தமிழ்நாடு

“செய்தியாளர்கள் - ஊடகவியலாளர்கள் நலன் காக்க சிறப்பு தடுப்பூசி முகாம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்க வரும் 6-ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

“செய்தியாளர்கள் - ஊடகவியலாளர்கள் நலன் காக்க சிறப்பு தடுப்பூசி முகாம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.அத்துடன் பொதுமக்கள் தங்களை கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அந்தவகையில் முதல்கட்டமாக இந்தியா முழுவதும் முன்கள பணியாளர்கள், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் ஜூலை 6ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் இந்த தடுப்பு முகாமில் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் தவறாமல் தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories