தமிழ்நாடு

கஞ்சா விற்ற அ.தி.மு.க நிர்வாகி... 5 பேரை கையும் களவுமாகப் பிடித்த போலிஸ்!

கஞ்சா விற்பனை வழக்கில் அ.தி.மு.க நிர்வாகியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா விற்ற அ.தி.மு.க நிர்வாகி... 5 பேரை கையும் களவுமாகப் பிடித்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பொற்குடையார் சாலையில் கஞ்சா விற்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் போலிஸார் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மதன் குமார், சகுந்தலா உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பலை போலிஸார் கையும் களவுமாகப் பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து கஞ்சாவை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரையும் போலிஸார் கைது செய்தனர். பிறகு போலிஸார் அவர்களிடம் நடத்தி விசாரணையில் மதன்குமார் அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் என்பது தெரியவந்தது.

அ.தி.மு.க பிரமுகர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories