தமிழ்நாடு

“மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என பிரதமரிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்” : அமைச்சர் துரைமுருகன் உறுதி!

மேகதாது அணை குறித்து பிரதமரை சந்திக்க உள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

“மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என பிரதமரிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்” : அமைச்சர் துரைமுருகன் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை நீர் நிரம்பியுள்ளநிலையில், அணை திறக்கப்பட்டால் கடைமடை வரை தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதற்காக வலது புறம் மற்றும் இடது புறம் கால்வாய்களில் தூர்வாரும் பணி கடந்த சில தினங்களில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தூர்வாரும் பணிகள் முடிவடைந்தவுடன் இன்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மோர்தானா அணை திறந்து வைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கும் அர்ப்பணித்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு, பூவை ஜெகன் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “மேகதாது அணை கட்ட முடியாது. பத்திரிக்கையில் ஏதோ செய்தியை பார்த்து இவர்கள் பேசுகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. பிரதமரை சந்தித்தபோது மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை குறித்து விரிவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமரும் உரிய அமைச்சரிடம் பேசி இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டம் முடிந்தபின் இதுகுறித்து பிரதமரிடம் தெரிவித்து நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்

banner

Related Stories

Related Stories