தமிழ்நாடு

இட்லி ஆர்டர் கொடுத்துவிட்டு தங்கச் சங்கிலியை பறித்த நபர்: விரட்டிப்பிடித்து மடக்கிய பொதுமக்கள்!

உணவகத்தில் இட்லி ஆர்டர் கொடுப்பது போல் வந்து கடையின் உரிமையாளரிடம் இருந்து 5 சவரன் தங்கச் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்.

இட்லி ஆர்டர் கொடுத்துவிட்டு தங்கச் சங்கிலியை பறித்த நபர்: விரட்டிப்பிடித்து மடக்கிய பொதுமக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை பெரும்பாக்கம், அடுத்த சித்தாலபாக்கத்தில் ரங்கா உணவகத்தில் இட்லி சாப்படுவது போல் கடந்த மூன்று நாட்களாக வந்த நபர்கள் இட்லி ஆர்டர் வேண்டும் என வந்து இன்று காலை கடையின் உரிமையாளர் ராஜலட்சுமி (33) என்ற பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றவர்களை பிடிக்க சொல்லி ராஜலட்சுமி கத்தி கூச்சலிட்டார். பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை சிறிது தூரம் துரத்திச் சென்று பிடித்து தர்மடி கொடுத்தனர்.

இதில் பிடிபட்ட நபர் வடபழனியை சேர்ந்த சிவா என்பதும் பழனி என்பவர் தப்பியோடி விட்டார். அவரிடம் நகையும் பறிபோனது. சிவாவை பொதுமக்கள் தாக்கியதில் வாயில் சிறிது காயம் ஏற்பட்டது. இவரிடம் இருந்து தாலிச் சங்கிலியில் இருந்த தங்க காசு மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு பெரும்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories