தமிழ்நாடு

“தாயும் தந்தையுமாய் தி.மு.க அரசு காக்கும்” - பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை அளித்த முதலமைச்சர்!

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பே அறிவித்தபடி நிவாரண உதவித்தொகை வழங்கினார்.

“தாயும் தந்தையுமாய் தி.மு.க அரசு காக்கும்” - பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை அளித்த முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவித்தொகை வழங்கினார்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்திடும் வகையில், அந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு, கரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை, கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் தலா 3,000 ரூபாய் உதவித் தொகை, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்பது போன்ற பல்வேறு நிவாரண உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 29.5.2021 அன்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புகளை செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டது.

அவற்றில் முக்கியமான நிவாரண உதவிகளான கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்து, அக்குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகையை அக்குழந்தைக்கு வட்டியோடு வழங்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், 5 குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் (Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited) வைப்பீடு செய்தமைக்கான சான்றிதழ்களை, அக்குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் வழங்கினார்.

மேலும், கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கிடும் வகையில், பெற்றோர்களில் ஒருவரை இழந்து தவிக்கும் 5 குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின் தந்தை / தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான நிவாரண வைப்பீட்டுச் சான்றிதழ்களையும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கான உடனடி நிவாரணத் தொகையையும் அவரவர் பாதுகாவலர்களிடம் வழங்கினேன். தாயும் தந்தையுமாய் தி.மு.க அரசு பரிந்து காக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories