தமிழ்நாடு

மூடநம்பிக்கையால் 10 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அலுவலத்தை திறந்து வைத்த தி.மு.க MLA - மக்கள் பாராட்டு!

கடந்த 10 ஆண்டுகளாக மூடியிருந்த கடலூர் சட்டமன்ற அலுவலகம் புதுப் பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மூடநம்பிக்கையால் 10 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அலுவலத்தை திறந்து வைத்த தி.மு.க MLA - மக்கள் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க.,வை சேர்ந்த எம்.சி சம்பத் எம்.எல்.ஏவும், அமைச்சராகவும் இருந்தார். அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்குவதற்காக அமைக்கப்பட்ட சட்டமன்ற அலுவலகத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வராமல் பூட்டி வைத்திருந்தார்.

மேலும், அலுவலகத்தை திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தால் தேர்தலில் தோல்வியடைந்து விடுவேன் என்ற அவரின் மூட நம்பிக்கையால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த அலுவலகம் பூட்டிய கிடந்தது.

இதையடுத்து, நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க எம்.எல்.ஏ அய்யப்பன் 10 ஆண்டுகளாகப் பூட்டிய கிடந்த அலுவலகத்தைப் புனரமைத்து புதுப்பொலிவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். இந்த அலுவலகத்தை இன்றுதமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இதனையடுத்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து தொகுதி மக்கள் கூறுகையில், அமைச்சராக இருந்த சம்பத் கடந்த 10 ஆண்டுகளாக அலுவலகத்தைப் பூட்டிய வைத்திருந்தார். அலுவலகத்தை திறந்தால் அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அவரின் மூட நம்பிக்கை காரணமாக அவர் அலுவலகத்தைத் திறக்காமலே வைத்திருந்தார்.

மக்கள் கோரிக்கை மனு கொடுப்பதற்கு ஒரு எம்.எல்.ஏ அலுவலகம் இல்லாமல், நாங்கள் 10 ஆண்டுகளாக இருந்தோம். தற்போது தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று சட்டமன்ற அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. நாங்கள் கோரிக்கை மனுக்களைக் கொடுப்பதற்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories