தமிழ்நாடு

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்த தி.மு.க MLA.. உறவினர்கள் பாராட்டு!

சென்னை காசிமேட்டில் நேற்று காலை கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் காற்றின் வேகத்தால் பைபர் படகு கடலில் மூழ்கியதால் 8 மணி நேரம் மீனவர்கள் உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்த தி.மு.க MLA.. உறவினர்கள் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த தேசம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் காந்தி, ஜானி, சார்லஸ், பொன்னுசாமி, வேல்முருகன் உள்ளிட்ட 5 பேரும் கோவளம் அருகே மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

திடீரென்று நள்ளிரவு 12 மணிக்கு கடல் சீற்றம் அதிகரித்து கடல் காற்று வீசவே எதிர்பாராதவிதமாக பைபர் படகு கடலில் மூழ்கியது. மீனவர்கள் 5 பேரும் கடலில் குதித்து ஐஸ் பாக்ஸ் மூடி பிடித்து உயிருக்கு போராடி உள்ளனர்.

இதைபார்த்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இதுபற்றி காசிமேடு மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ. எபினேசருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவரது மேற்பார்வையில் மீனவ சங்கத்தினர் இரட்டை என்ஜின் கொண்ட 4 பைபர் படகுகளில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, உயிருக்கு போராடி கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க புறப்பட்டு சென்றனர்.

8 மணி நேரமாக உயிருக்கு போராடி இருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் மற்றும் உடல்நிலை பாதிப்படைந்த மீனவர்களுக்கு சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றார்.

30 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைபர் படகு மூழ்கிய போதும் உயிருக்குப் போராடி பத்திரமாக கரை சேர்ந்த மீனவர்களால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எபினேசருக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க எம்.எல்.ஏ எபினேசரை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த காசிமேட்டைச் சேர்ந்த 5 மீனவர்களைத் தமது உடனடி நடவடிக்கையால் காப்பாற்றிய ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் அவர்களுக்கும், மீனவ சங்கத்தினருக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். தி.மு.க என்றைக்கும் மக்கள் நலன் காக்கும் இயக்கம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories