தமிழ்நாடு

“பழங்குடி மக்களுக்கு இம்மாதம் இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி போடப்படும்”: அரசின் ஆக்சன் பிளான் திட்டம்?

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 21 ஆயிரத்து 400 பழங்குடியினருக்கு இம்மாதம் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க அரசு முடிவு செய்துள்ளது.

“பழங்குடி மக்களுக்கு இம்மாதம் இறுதிக்குள் முழுமையாக  தடுப்பூசி போடப்படும்”: அரசின் ஆக்சன் பிளான் திட்டம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

கடந்த ஆட்சியில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற போதுமான இடம் இல்லாத சூழ்நிலை, நாள்தோறும் நூற்றுக்கணக்கான இறப்புகள் என உருக்குலைந்து இருந்த தமிழ்நாட்டை, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிரடியாகக் களம் இறங்கினார்.

அதன்படி அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கூட்டணி கட்சியினர், மருத்துவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து அவரது சிறப்பான ஆளுமையால் முதலில் ரெம்டெசிவர் பற்றாக்குறையில் இருந்து தமிழகத்தை மீட்டார். அதன்பின் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்களில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளைக் காக்கும் வகையில், ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் ஜீரோ வாட் அமைத்து உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“பழங்குடி மக்களுக்கு இம்மாதம் இறுதிக்குள் முழுமையாக  தடுப்பூசி போடப்படும்”: அரசின் ஆக்சன் பிளான் திட்டம்?

மேலும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து போதுமான அளவிற்கு ஆக்சிசனை கொண்டுவந்து இன்று தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்ற நிலையை உருவாக்கி, கொரோனாவால் இறக்கும் சதவீதத்தை 60 சதவீதத்திற்கு மேல் தற்போது குறைத்துள்ளார்.

தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருவது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த இலக்காக 18 வயது முதல் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களைக் கண்டறிந்து முழுமையாக அந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதலில் நீலகிரி மாவட்டம் 7 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டம் என்பதால் ( ஆக்சன் பிளான்) என்ற திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறைந்த எண்ணிக்கையோடு நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இருளர், குறும்பர், பணியர், காட்டு நாயக்கர், தோடர், கொத்தர் போன்ற பழங்குடினர் மக்கள் 27 ஆயிரத்து 500 பேர் வாழ்ந்து வரும் நிலையில், இவர்களில் 21437 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்தவர்கள் ஆவார். எனவே இம்மாதம் இறுதிக்குள் பழங்குடியினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த, மாவட்டத்திற்குத் தடுப்பூசி வழங்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

“பழங்குடி மக்களுக்கு இம்மாதம் இறுதிக்குள் முழுமையாக  தடுப்பூசி போடப்படும்”: அரசின் ஆக்சன் பிளான் திட்டம்?

அதற்கான பணியை தற்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் தனிக்குழு அமைத்து பழங்குடியினர் கிராமங்களுக்குச் சென்று தடுப்பூசி முகாம்கள் நடத்துவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நீலகிரி ஆதிவாசி சங்கங்களுடன் இணைந்து பழங்குடி மக்களுக்குத் தேவையான அரிசி, காய்கறி, மளிகை பொருட்களும் வழங்கி தடுப்பூசி அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் இந்த சிறப்பான நடவடிக்கைக்கு நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க தலைவர் திரு ஆல்வாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார், முதல்வருக்கு அவர் நன்றியினையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “தமிழக அரசு நீலகிரி மாவட்டம் அரியலூர் மாவட்டம் போன்ற சிறு மாவட்டங்களைத் தேர்வு செய்து முழுமையாகத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது அதன் முதல் கட்டமாக, இம்மாதம் இறுதிக்குள் அனைத்து பழங்குடியினருக்கும் தடுப்பு ஊசி செலுத்தி முடிக்கப்படும்” என்றார்.

மாவட்டத்திலுள்ள 80% தோட்டத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு, தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி மாவட்டம் உள்ளதாகவும் அவர் பெருமிதம் கொண்டார்.

banner

Related Stories

Related Stories