தமிழ்நாடு

ஜூன் இறுதிக்குள் 18+ பழங்குடிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் - நீலகிரியில் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசி பெற விரைவில் மறுடெண்டர் கோரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உதகை அருகே பழங்குடி கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளபட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்து வருகிறார்.  இன்று காலை உதகை அரசு தலைமை மருத்துவமனை, புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி பணிகைளை ஆய்வு செய்த பின்னர் மசினகுடி  அருகே உள்ள  செம்மநத்தம் பழங்குடியினர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து அக்கிராம மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன் நீலகிரி மாவட்டத்தில் 27,032 பழங்குடி மக்கள் இருப்பதாகவும் அதில் 21,435 18 வயதிற்கு மேல் இருப்பதாகவும் அதில் 3,129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடபட்டுள்ளதாதவும் தெரிவித்தார்.

மேலும் ஜூன் மாதம் இறுதிக்குள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பழங்குடி மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அதன் மூலம் நாட்டிலேயே அனைத்து பழங்குடி மக்களுக்கும் தடுப்பூசி போடபட்ட முதல் மாவட்டம் என்ற இடம் பிடிக்கும் என்றும் கூறினார்.

மேலும் சென்னை அரசு பொது மருத்துவமனையை  போலவே நீலகிரி மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருவதாகவும் தொற்றால் பாதிக்கப்படுவோரை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் கொரோனா தடுப்பூசிக்கான குளோபல் டெண்டர் கோரப்பட்டது. அந்த டெண்டர் நேற்று முடிவடைந்தது. ஆனால் தமிழகத்திற்கான டெண்டரில் இது வரை யாரும் டெண்டர் கோரவில்லை என்பது உண்மை அதற்கான காரணம் குறித்து முதல்வர் சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் கலந்தாரோசிப்பார்.

விரைவில் மறு டெண்டர் கோர நடவடிக்கை எடுக்கபடும் என்றார். மேலும் தமிழகத்தில் 870 மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விடகூடுதலாக வசூலித்தால் அந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

இன்று தமிழகத்தில் 81 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும்  ஆனால்  ஜீன் மாதம் இறுதிக்குள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆதிவாசி மக்களுக்கும்  கொரோனா தடுப்பூசி போடபட்டு இந்தியாவி லேயே அனைத்து ஆதிவாசி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடபட்ட முதல் மாவட்டம் என்ற நிலையை நீலகிரி மாவட்டம் எட்டபடும் என்றார்.

banner

Related Stories

Related Stories