தமிழ்நாடு

“2 ஆயிரம் மருத்துவர்கள்.. 6 ஆயிரம் செவிலியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!

மருத்துவர் செவிலியர் தட்டுப்பாடு இல்லாத மருத்துவமனைகளை உருவாக்க துரிதமாக நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.கஸ்டாலின் எடுத்து வருகிறார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

“2 ஆயிரம் மருத்துவர்கள்.. 6 ஆயிரம் செவிலியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்ததார்.

அதபோல், செய்யூர் அரசு பொது மருத்துவமனை மற்றும் பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் திறந்துவைத்தார்.

பின்னர் செய்திளார்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், “செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் ஏற்கனவே 435 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. மேலும் அதை விரிவுபடுத்தி 100 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக இன்று புதியதாக திறக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மதுராந்தகம், செய்யூர், பவுஞ்சூர் ஆகிய பகுதிகளில் புதியதாக ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த அரசு விழிப்புடன் இருக்கிறது.

புதியதாக 6 ஆயிரம் செவிலியர்கள் மற்றும் 2 ஆயிரம் மருத்துவர்கள் நியமனம் செய்து, மருத்துவர் செவிலியர் தட்டுப்பாடு இல்லாத மருத்துவமனைகளாக மாற்ற துரிதமாக நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.கஸ்டாலின் எடுத்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories