தமிழ்நாடு

"கொரோனா சிகிச்சை கிடைக்காமல் யாரும் உயிரிழந்ததாக புகார் வரவில்லை"‌: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

தமிழகத்தில் சிகிச்சை இல்லாமல் கொரோனா தொற்று பாதித்தவர்கள் மரணமடைந்ததாக எந்த புகாரும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"கொரோனா சிகிச்சை கிடைக்காமல் யாரும் உயிரிழந்ததாக புகார் வரவில்லை"‌: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை கண்காணிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஏற்கனவே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருவதாகவும், இரண்டாவது அலை தணிந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், ஆரம்பத்தில் படுக்கை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்த போதும், தற்போது வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், சிகிச்சையில்லாமல் கொரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்தார் என எந்த புகாரும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

banner

Related Stories

Related Stories