தமிழ்நாடு

ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு பதிலடி... தமிழக அரசின் புறக்கணிப்பு முடிவுக்கு மிகுந்த வரவேற்பு!

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளையும் அமைச்சர்களையும் நிராகரித்து அதிகாரிகள் மூலம் கல்வித்துறையை நிர்வாகிக்க ஒன்றிய அரசு முயல்வது கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிரானது என சிபிஐ தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு பதிலடி... தமிழக அரசின் புறக்கணிப்பு முடிவுக்கு மிகுந்த வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆலோசனை நடத்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் அனைத்து மாநிலக் கல்விச் செயலாளர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்த நேற்று முன்தினம் அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்போது, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய கல்வி அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் எனவும் அக்கூட்டத்தில் மாநில அரசின் சார்பாக மிக முக்கியமான பொருண்மைகளான புதிய தேசிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தலின் நிலை போன்றவற்றின் மீதான கருத்துக்களையும், பரிந்துரைகளையும் தாம் தெரிவிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால், தமிழக அரசின் இந்தக் கருத்துக்கு மத்திய அரசு பதிலேதும் அளிக்காமல் கூட்டத்தை திட்டமிட்டபடி இன்று நடத்தியது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தது.

ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு பதிலடி... தமிழக அரசின் புறக்கணிப்பு முடிவுக்கு மிகுந்த வரவேற்பு!

தமிழக அரசின் இத்தகைய முடிவுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் கூட்டாட்சி கோட்பாடுகளை சிதைக்கும் ஒன்றிய அரசின் இத்தகைய முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புக்கான முடக்கம் மற்றும் ஊரடங்கு காலம் 15 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த நெருக்கடி சமூக வாழ்வின் எல்லா தளங்களிலும் இயல்பு நிலையை பாதித்துள்ளது.

குறிப்பாக பள்ளிக் கல்வி கடுமையாக பாதித்துள்ளது. நோய்த் தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் சூழலில் ஒன்றிய அரசு புதியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது. இதற்காக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர்ரமேஷ் பொக்கிரியால் மாநில கல்வித்துறை அதிகாரிகளின் காணொளிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு பதிலடி... தமிழக அரசின் புறக்கணிப்பு முடிவுக்கு மிகுந்த வரவேற்பு!

இந்த கூட்டத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் பள்ளிகளை இயக்குவது புதிய கல்விக் கொள்கையை அமலாக்குவது போன்ற முக்கியமான கொள்கை சார்ந்த பிரச்சனைகள் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாநில கல்வி அமைச்சர்கள் அழைக்கப்படவில்லை.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளையும் அமைச்சர்களையும் நிராகரித்து அதிகாரிகள் மூலம் கல்வித்துறையை நிர்வாகிக்க ஒன்றிய அரசு முயல்வது கூட்டாச்சி கோட்பாடுகளுக்கு எதிரானது. அதிகார அத்துமீறலாகும். இந்த நடைமுறையை எந்த வகையிலும் ஏற்க இயலாது.

கூட்டாட்சி கோட்பாட்டை சிதைக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில் தமிழ்நாடு அரசு, ஒன்றிய கல்வி அமைச்சர் நடத்தும் காணொளிக் கூட்டத்தில் மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்து செயல்படுத்தியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories