தமிழ்நாடு

“தி.மு.க அரசு இஸ்லாமியர்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

தி.மு.கழக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதை இந்த இனிய நன்னாளில் மீண்டும் உறுதிப்படுத்த விழைகிறேன்

“தி.மு.க அரசு இஸ்லாமியர்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

தியாகமும் ஈகையும் இணைந்த மார்க்க நெறியினைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இனிய ரமலான் நல்வாழ்த்துகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: -

தியாகமும் ஈகையும் இணைந்த மார்க்க நெறியினைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!

தமிழக மக்களுக்கே உரிய பெருமைக்குரிய பண்பாடான அனைத்து மத சகோதரத்துவம் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும் வகையில், இந்தப் பெருநாள் அமையட்டும். அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து பெருநாளை கொண்டாட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், நானும் என்றும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மேல் பேரன்பு கொண்டவர்கள்.

தி.மு.கழக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதை இந்த இனிய நன்னாளில் மீண்டும் உறுதிப்படுத்த விழைகிறேன். பேரிடரிலிருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories