தமிழ்நாடு

“கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் சேர்ந்து போரிடுவோம்” - நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் சேர்ந்து போரிடுவோம்” - நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோள் விவரம்:

கொரோனா இரண்டாம் அலையால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேரிடரை எதிர்கொள்ள, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று மக்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவ்வாறு பெறப்படும் நன்கொடைகள் அனைத்தும் ஆக்சிஜன் உற்பத்தி, உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள் மற்றும் பிற மருத்துவ கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படும் என நான் உறுதி கூறுகிறேன். இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு.

“கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் சேர்ந்து போரிடுவோம்” - நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

நன்கொடைகள் மின்னனு முறை மூலம் பின்வருமாறு வழங்கலாம்.

* ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் வழியாக செலுத்தி ரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம்.

*ECS/RTGS/ NEFT மூலமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.

வங்கியின் பெயர்-இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கிளை-தலைமைச்செயலகம், சென்னை-600009

சேமிப்பு கணக்கு எண்-117201000000070

IFScode-IOBA0001172

MICR Code-600020061

CMPRFPAN-AAAGC0038F

* UPI -VPA ID: tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay PayTM, Amazon Pay, Mobikwik போன்ற பல்வேறு செயலிகள்

ஆகிய வழிகளில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories