தமிழ்நாடு

முழு ஊரடங்கு எதிரொலி: தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல மே 9 வரை 24 மணி நேரமும் பேருந்து சேவை - தமிழக அரசு

மே 10ம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு என்பதால் இன்றும், நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

முழு ஊரடங்கு எதிரொலி: தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல  மே 9 வரை 24 மணி நேரமும் பேருந்து சேவை - தமிழக அரசு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் ஏற்கனவே ஞாயிறன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் காய்கறி கடைகளுக்கும், உணவு விடுதிகளுக்கும், தேநீர் கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் பேருந்துகளில் 50 சதவீதம் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலிலிருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்கும் விதமாக, மே 10 ஆம் தேதியிலிருந்து மே 24ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்குத் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களும், ஊழியர்களும் தங்களின் சொந்த ஊர்களுக்கு எவ்வித நெருக்கடியும் இன்றி செல்வதற்காக நாளை வரை (மே 9) 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "மே 10ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலுக்கு வருவதால் இன்றும் நாளையும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும். அதேபோல் இன்று இரவிலும் பேருந்துகள் ஓடும். மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகளும் இயக்கம். இதற்காகப் பேருந்து நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories