தமிழ்நாடு

வேலையை காட்டிய மோடி அரசு; தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

5 மாநிலங்களின் தேர்தல் முடிந்ததும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வேலையை காட்டிய மோடி அரசு;  தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல் அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.

இந்த ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் தி.மு.கவும், கேரளாவில் மார்க்சிஸ்ட் கூட்டணியும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கிறது. அதேபோல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறார். அசாமில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கிறது.

கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தபோது கூட மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்தது. பின்னர் ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

தற்போது ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் வெளிவந்த பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 12 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.55 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 85.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories