தமிழ்நாடு

ஆக்சிஜனை சாக்காக வைத்து ஸ்டெர்லைட்டை திறக்க முயல்வதா? - கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொங்கியெழுந்த மக்கள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஆக்சிஜனை சாக்காக வைத்து ஸ்டெர்லைட்டை திறக்க முயல்வதா? - கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொங்கியெழுந்த மக்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாமா என்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் தலைமையில் , நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சுமார் 200 போலீசார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் ஆதரவு என மொத்தம் 40 பேர் கலந்து கொள்கின்றனர். கருத்துக்கேட்பு கூட்டத்தில் கூடுதலாக மக்களை அனுமதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மதிமுகவினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டு கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ள நபர்களை மட்டும் காவல்துறையினர் உள்ளே அனுமதித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் போராட்டக் குழுவினர் தரையில் அமர்ந்து அனைவரையும் கருத்து கேட்பு கூட்டத்தில் அனுமதி கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்சிஜனை சாக்காக வைத்து ஸ்டெர்லைட்டை திறக்க முயல்வதா? - கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொங்கியெழுந்த மக்கள்

பொதுமக்கள் அனைவரையும் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அமைப்புக்கு 3 பேர் வீதம் உள்ள அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் துவங்கியது. அப்போது ஊடகத் துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியே செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கு கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிக அளவில் அனைவரும் வெளியேற்றப்பட்டு அதன் பின்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நிச்சயமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்காது என்று தெரிவித்ததும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இருக்கையை தட்டி உற்சாகம் செய்தனர்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் இன்று காலை 11 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது என்றார். ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில் கூட்டம் நிறைவடைந்தது.

மேலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆக்சிஜன் ஆலை இருப்பதாக தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை பின் வழியாக திறக்க மத்திய அரசுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார்கள்.

banner

Related Stories

Related Stories