தமிழ்நாடு

மீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு?

கடந்த ஆண்டு ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு கட்டுப்பாடுகளில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு விலக்களித்துள்ளது தமிழக அரசு.

மீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு வரும் ஏப்ரல் 20 முதல் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய கட்டுபாடுகளின் படி, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

மேலும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு இரவில் அரசு, தனியார் போக்குவரத்து அனுமதி கிடையாது என்றும் அனைத்து சுற்றுலாதலங்களும் மூடப்படும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் வாங்க மட்டுமே அனுமதி. ஸ்விகி சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் உணவு விநியோகம் செய்யலாம்.

தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. அதற்கு மேல் அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.டி. பணியாளர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு கட்டுப்பாடுகளில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு விலக்களித்துள்ளது தமிழக அரசு.

banner

Related Stories

Related Stories