தமிழ்நாடு

"ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்ற 10 ரூபாய் டாக்டர் மறைவு” - சோகத்தில் மூழ்கிய வடசென்னை!

10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர் கோபால், உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

"ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்ற 10 ரூபாய் டாக்டர் மறைவு” - சோகத்தில் மூழ்கிய வடசென்னை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர் கோபால், உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மருத்துவர் கோபால். இவர் கடந்த பல ஆண்டுகளாக வெறும் பத்து ரூபாய்க்கு அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்தார்.

மருத்துவர் கோபால், சென்னை ராஜீவ் காந்தி மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

10 ரூபாய்க்கு சிறப்பாக மருத்துவம் பார்த்ததால் அப்பகுதி மக்கள் இவர் மீது மிகுந்த அன்பைக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த மருத்துவர் கோபால் இன்று காலமனார்.

10 ரூபாய் டாக்டர் கோபால் உயிரிழந்தது வடசென்னை பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதி மக்கள், டாக்டர் கோபால் மறைவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

10 ரூபாய் டாக்டர் என்றழைக்கப்படும் சமூகநீதி மருத்துவர் கோபால் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்ற 10 ரூபாய் டாக்டர் மறைவு” - சோகத்தில் மூழ்கிய வடசென்னை!

தி.மு.க தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை வண்ணாரப்பேட்டையைச் சார்ந்த சமூக சேவை மருத்துவர் கோபால் அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எவருக்கும் எளிதில் கிடைத்திடாத '10 ரூபாய் டாக்டர்' என்ற அடைமொழியை மருத்துவத்தை சேவையாகச் செய்து பெற்றவர்! பல்லாண்டுகள் பேசப்படும் அவரது புகழ்! ஆழ்ந்த அஞ்சலி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories