தமிழ்நாடு

“என்னிடம் இருந்த பணத்தை எண்ணி பரிதாபமாகப் பார்த்த அதிகாரிகள்”- ஐ.டி ரெய்டு அனுபவம் பகிரும் சி.மகேந்திரன்!

தேர்தல் பிரச்சாரத்தின் போது வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்து சி.பி.ஐ மூத்த தலைவர் சி.மகேந்திரன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

“என்னிடம் இருந்த பணத்தை எண்ணி பரிதாபமாகப் பார்த்த அதிகாரிகள்”- ஐ.டி ரெய்டு அனுபவம் பகிரும் சி.மகேந்திரன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து, மோடி மற்றும் அமித்ஷாவின் உத்தரவின் படி தொடர்ச்சியாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

குறிப்பாக, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தியது. இதன் உச்சமாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஒருநாள் முழுவதும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. ஆனால், ஒன்றும் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர் அதிகாரிகள்.

இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தமது அறையில் சோதனை நடத்தியது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

“என்னிடம் இருந்த பணத்தை எண்ணி பரிதாபமாகப் பார்த்த அதிகாரிகள்”- ஐ.டி ரெய்டு அனுபவம் பகிரும் சி.மகேந்திரன்!

சமூக வலைதளத்தில் சி.மகேந்திரன் எழுதியுள்ள பதிவில், "நேற்று நள்ளிரவு, சரியாக 1.00 மணி. தேர்தல் பணிக்காக தேன்கணிக்கோட்டை ‘ சிட்டி’ வாடகை விடுதியில், ஒரு நபர் தங்கிக் கொள்ளும் அறையில் இருந்தேன். கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தேன். வாசலில் நவீன துப்பாக்கி ஏந்திய மூன்று இராணுவ வீரர்கள். ஐந்து பேர் கொண்ட வருமான வரி அதிரடி குழு.

‘என்ன வேண்டும்‘ என்று கேட்டேன்.

‘சோதனை‘ என்றார்கள்.

’செய்து கொள்ளுங்கள்’ என்றேன்.

அறையில் சோதனை செய்துகொண்டே இருந்தார்கள். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

மாலைதான், கர்நாடக மாநிலத்தின் பாரதிய ஜனதா அமைச்சர்கள் மூலம் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் முயற்சிகள் தளி தொகுதியில் நடைபெறுகிறது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னேன். அன்று இரவே என் அறையில் சோதனை நடக்கிறது என்றால் இதைப் பார்த்து, எனக்குள் சிரித்துக் கொள்வதை தவிர வேறு நான் என்ன முடியும்?

வருமான வரித்துறை அதிகாரி பீகாரைச் சேர்ந்தவர். அவரும் அவரது குழுவினரும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.

அவர்கள் சென்ற உடன் என்னிடமிருந்த பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்தேன். மொத்தம் 377 ரூபாய் இருந்தது" எனப் பதிவு செய்துள்ளார்.

பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினரை விட்டுவிட்டு, சி.பி.ஐ தலைவர் தங்கியிருந்த விடுதியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories