தமிழ்நாடு

“கொள்ளை வழக்கில் கைது; ஆனால் விசாரணையில்...” - போலிஸாரை அதிரவைத்த ரவுடியின் வாக்குமூலம்!

சென்னையில், கவுன்சிலரை கொலை செய்ததற்குப் பணம் தராமல் இழுத்தடித்ததால், கூட்டாளிகள் இருவரைக் கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கொள்ளை வழக்கில் கைது; ஆனால் விசாரணையில்...” - போலிஸாரை அதிரவைத்த ரவுடியின் வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த 13ம் தேதி இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து நோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடம் கத்தியைக் காட்டி 21 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் செல்போன்களை பறித்துக்கொண்டு, மருத்துவர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சைதாப்பேட்டை போலிஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், மருத்துவமனையிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலிஸார், ரவுடி ராக்கையனின் கூட்டாளிகள்தான் இதைச் செய்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் திருடிச் சென்ற செல்போன்களை ஆய்வு செய்தபோது, சிவகங்கையில் இந்த கும்பல் இருப்பதை அறிந்த போலிஸார் அங்கு விரைந்தனர்.

அங்கு, பதுங்கி இருந்த ரவுடி ராக்கையன் மற்றும் அவனது கூட்டாளிகளான சீனிவாசன், ரஜினி, ஏழுமலை, கருக்கா வெங்கடேசன், நெல்சன், ஜாபர்கான்பேட்டை மதன்ராஜ் ஆகிய 6 பேரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போலிஸார், மற்றொரு குற்றவாளியான அண்ணாதுரை எங்கே என கேட்டனர். அப்போது இந்த கொள்ளை கும்பல் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளது.

“கொள்ளை வழக்கில் கைது; ஆனால் விசாரணையில்...” - போலிஸாரை அதிரவைத்த ரவுடியின் வாக்குமூலம்!

அப்போது, கொள்ளை கும்பல் சொன்னதைக் கேட்டு போலிஸாரே அதிர்ச்சியடைந்தனர். அதாவது, கடந்த 2015ம் ஆண்டு ஆவடியில் முருகன் என்கிற கவுன்சிலரை ரவுடி ராக்கையன் தலைமையிலான கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர். கொலை செய்வதற்கு பேசப்பட்ட பணத்தை, அண்ணாதுரை தராமல் இழுத்தடித்ததால், அண்ணாதுரையையும், தங்கபாண்டியனையும் கொலை செய்து கிண்டியில் உள்ள கிணற்றில் வீசினோம் என விசாரணையில் ராக்கையன் தெரிவித்ததை கேட்டு போலிஸாரே அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து போலிஸார் கிண்டிக்கு சென்று அண்ணாதுரை, தங்கபாண்டியன் மற்றும் அண்ணாதுரை ஆகியோரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ரவுடி ராக்கையன் கும்பலிடம் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories