தமிழ்நாடு

“அ.தி.மு.கவின் தலையில் சவாரி செய்து தமிழகத்தில் கால் பதிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது” : இரா.முத்தரசன் சாடல்!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் முழுக்க முழுக்க பண பலத்தை நம்பியே அ.தி.மு.க தேர்தலை சந்திப்பதாக இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அ.தி.மு.கவின் தலையில் சவாரி செய்து தமிழகத்தில் கால் பதிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது” : இரா.முத்தரசன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் மாநில குழு ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “பா.ஜ.க என்பது பேராபத்துக்குரிய கட்சியாகும். அந்த பேராபத்துக் குரிய கட்சி தமிழகத்தில் தடம் பதிக்க முயற்சிக்கிறது.

அ.தி.மு.கவின் பலவீனத்தை பயன்படுத்தி, அதிமுகவின் தோள் மீது இல்லாமல், தலையில் சவாரி செய்து கொண்டு தமிழகத்தில் தடம் பதிக்க முயற்சிக்கிறது. அதனை தடுத்து நிறுத்துவது என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

அரசியலமைப்பு சட்டத்தின் மீதே நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் வகுப்புவாத கட்சியை தோற்கடிக்க வேண்டும். மேலும் வகுப்புவாத கட்சியை ஆதரிக்கும் கட்சியையும் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் ஒரு மகத்தான அரசியல் போராக இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம்.

தமிழகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த அரசியல் போரை முன்னெடுத்துள்ளோம். நடைபெற உள்ள இந்த தேர்தலை முழுக்க முழுக்க சொந்த பலம், கூட்டணி பலம் என எதையும் நம்பாமல் பண பலத்தை மட்டுமே நம்பி அ.தி.மு.க இருப்பதாகவும், பணத்தின் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவில் தான் அவர்கள் உள்ளார்கள். தமிழ்நாட்டு மக்கள் இதை நிராகரிப்பார்கள். அதிமுகவின் கனவு பகல் கனவுதான் என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories