தமிழ்நாடு

“தொகுதிக்கு என்ன செய்தீர்கள் ?” : வைகைச் செல்வனை பார்த்து கேள்வி கேட்ட முதியவரை தாக்கிய அ.தி.மு.கவினர்!

அருப்புக்கோட்டை தொகுதியில், வைகைச்செல்வன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது, அமைச்சராக இருந்த போது என் செய்தீர்கள்? என முதியவர் கேள்வி எழுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தொகுதிக்கு என்ன செய்தீர்கள் ?” :  வைகைச் செல்வனை பார்த்து கேள்வி கேட்ட முதியவரை தாக்கிய அ.தி.மு.கவினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க தங்களின் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிமுகங்களை முடித்துக்கொண்டு, வேட்புமனு தாக்கல், தேர்தல் பரப்புரை என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க சார்பில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும், வைகைச் செல்வன் நேற்று இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, முதியவர் ஒருவர், நீங்கள் அமைச்சராக இருந்தபோது என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பியது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அருப்புக்கோட்டைத் தொகுதியில் போட்டியிடும் வைகைச் செல்வன், ஏற்கனவே 2011ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று அமைச்சராகவும் இருந்தார். இந்நிலையில், மீண்டும் இதே தொகுதியில் களம் காண்கிறார்.

இந்நிலையில், வைகைச் செல்வன் அருப்புக்கோட்டையில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கினார். பின்னர் பாலையம்பட்டி பகுதியில் மக்களை சந்தித்தபோது, அங்கிருந்த முதியவர் ஒருவர், “நீங்கள் இதற்கு முன் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த போது தொகுதிக்கு என்ன செய்தீர்கள் ? இப்போது வாக்கு கேட்டு வந்துவிட்டீர்களா ? என சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.

இதனால், அதிருப்தியடைந்த அ.தி.மு.கவினர் முதியவரை அடிக்க முற்பட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. மேலும், முதியவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், தனது பிரச்சாரத்தை உடனே முடித்துக் கொண்டு அங்கிருந்து உடனே வைகைச் செல்வன் நடையை கட்டிவிட்டார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக நீங்கள் தான் ஆட்சியில் இருந்திங்க, அப்போது தொகுதிக்கு ஒன்றும் செய்யாமல், இப்போது வந்து வாக்கு கேட்கிறீர்களா என அ.தி.மு.க வேட்பாளர்களைப் பார்த்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories