தமிழ்நாடு

நீங்க எங்க ஓட்டு கேட்டு போனாலும் அங்கு மறைக்க முடியாத ஒரே விஷயம் : தி.மு.கவும், கலைஞரும் !

தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட கலைஞர் டி.வியை தற்போதும் பயன்படுத்தி வருவதாகவும், சிலர் டி.வி நன்றாக ஓடுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 நீங்க எங்க ஓட்டு கேட்டு போனாலும் அங்கு மறைக்க முடியாத ஒரே விஷயம் : தி.மு.கவும், கலைஞரும் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கான பணியை தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது.

தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்குள் இருந்த முறையற்ற தொகுதி பங்கீடு காரணமாக அ.தி.மு.க தொண்டர்கள் பலரும், பா.ஜ.க வேண்டாம் என்றும், அ.தி.மு.க வேட்பாளர்களை மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, அ.தி.மு.க ஆட்சியால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பின்னோக்கிச் சென்றுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தொடர்ந்து எதிராக செயல்பட்டு வருகிறது.

 நீங்க எங்க ஓட்டு கேட்டு போனாலும் அங்கு மறைக்க முடியாத ஒரே விஷயம் : தி.மு.கவும், கலைஞரும் !

மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் மறுப்பு என தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராகச் செயல்படும் மோடி அரசை எந்த கேள்வியும் கேட்காமல் ஆதரித்து வந்த அ.தி.மு.க அரசு, தற்போது தங்கள் ஆட்சியின் போது செய்த நலத்திட்டங்கள் மற்றும் உதவிகளைக் கூறி பொதுமக்களிடம் வாக்கு கேட்பதற்கு பதிலாக, தி.மு.க பற்றி அவதூறாக பேசி வாக்கு சேகரித்து வருகிறது.

அதன்படி கடந்தவாரம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட கலைஞர் டி.வி, தற்போது எந்த வீட்டிலாவது நல்ல நிலையில் இருக்கிறது என்று காண்பித்தால் ஒரு லட்சம் பரிசு தருகிறேன்” என்று அறிவித்தார்.

இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமாருக்கு தி.மு.கவினர் மற்றும் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட கலைஞர் டி.வியை தற்போதும் பயன்படுத்தி வருவதாகவும், சிலர் டிவி நன்றாக ஓடுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பதிலடிக் கொடுத்தனர்.

 நீங்க எங்க ஓட்டு கேட்டு போனாலும் அங்கு மறைக்க முடியாத ஒரே விஷயம் : தி.மு.கவும், கலைஞரும் !

மேலும் நெட்டிசன்கள், அந்தப் புகைப்படங்கள் அனைத்தையும் சேமித்து, அமைச்சர் ஜெயக்குமார் கூறிய புகைப்படத்தையும் வைத்து மீம்ஸ் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர். அதில், எங்கள் வீட்டில் கலைஞர் டி.வி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் அறிவித்த பரிசுத் தொகையை பணமாகவா? அல்லது காசோலைகளாக தருவீர்களா என கலாய்ப்பது போல பதிவிட்டுள்ளனர்.

இதனையடுத்து, சமீபத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாக்கு சேகரிக்க சென்ற வீட்டில் அமர்ந்து பேசும் புகைப்படம் ஒன்று வெளியானது. அந்த புகைப்படத்தில் அவர்களுடைய வீட்டில் நல்ல நிலையில் கலைஞர் டிவி இருப்பதைக் குறிப்பிட்டு அதிமுக அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், அ.தி.மு.க ஆட்சியில் கட்டிய தடுப்பணைகள் ஒரே மாதத்தில் உடைந்து போகும் நிலையில், அம்மா மினி கிளினிக் திறப்பு விழா அன்றே இடிந்த நிலையில் தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட கலைஞர் டி.வி இன்றும் நல்ல நிலையில் பலரது வீட்டில் இருப்பதாகவும், கலைஞரின் சாதனையையும் நேர்மையையும் பேசுவதற்கு கலைஞரின் விலையில்லா வண்ண தொலைக்காட்சி போதும் எனவும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories