தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு தலைமைதாங்கிய ஜெயராமன் மீண்டும் போட்டி - பாடம் கற்பிக்க தயாராகும் மக்கள்!

பொள்ளாச்சி கொடூரத்திற்குத் துணைபோன பொள்ளாச்சி ஜெயராமனுக்கு மீண்டும் அதே தொகுதியில் வாய்ப்பளித்த எடப்பாடி பழனிசாமியின் கேடுகெட்ட ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு தலைமைதாங்கிய ஜெயராமன் மீண்டும் போட்டி - பாடம் கற்பிக்க தயாராகும் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘உன்ன நம்பிதானடா வந்தேன் ஏன் இப்படி பன்ற, ஃப்ரெண்ட்னு சொல்லித்தான கூப்ட்டு வந்த விட்டுட்றா”, “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க வலிக்குது அண்ணா.. விட்டுடுங்க” என்று பெண்கள் கதறி அழுகிறார்கள். ஆனால் அந்த மிருகங்கள் இரக்கம் காட்டவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தையும், அந்தப் பெண்களின் அழுகுரல்களையும் நம்மால் மறக்க முடியுமா?

பொள்ளாச்சி என்று சொன்னால் நமக்கு அந்த அயோக்கியர்களின் கொடுமை தான் இப்போது முதலில் ஞாபகம் வருகிறது. இந்த வழக்கில் சிக்கியவர்களான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

1100-க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்து வைத்து பணம் பறித்து, கற்பை சூறையாடுகின்ற கூட்டம் இந்த அ.தி.மு.கவின் ஆதரவால் உருவானது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பெண்களைச் சிதைத்த இந்தக் கூட்டத்தில் எம்எல்.ஏவின் மகன் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் உண்டு என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர். ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை காவல்துறை. ஆனால் நான்கு பேரை மட்டும் கைது செய்து வழக்கை மூடப் பார்க்கிறது. இதைவிட ஒரு நீதிப்படுகொலையை இங்கே நிகழ்த்தமுடியுமா?

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு தலைமைதாங்கிய ஜெயராமன் மீண்டும் போட்டி - பாடம் கற்பிக்க தயாராகும் மக்கள்!

இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் பொள்ளாச்சியில் நிகழ்ந்த சம்பவங்கள். அனைவராலும் அறியப்பட்ட பெண்களின் பாதுகாப்புக்கெதிரான இந்தக் கொடூரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. குற்றவாளியின் தந்தை ஜெயராமன் துணை சபாநாயகராக பதவியில் இருந்தார். அவர்கள் கையில் அதிகாரம் இருப்பதால் எத்தகைய குற்றத்தையும் வல்லுறவையும் அரங்கேறிவிட்டுத் தப்பித்துவிடலாம் என அடுத்தடுத்த கொடூரங்களை அரங்கேற்றுகிறார்கள். காரணம் முதல்வரும் துணை முதல்வரும் அவர்களுக்குச் சாதகமாகவே செயல்படுகின்றனர்.

சமீபத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக 3 அ.தி.மு.கவினர் சிக்கினர். அதன்படி ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால், வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு, அருளானந்தம் ஆகியோர் சி.பி.ஐ போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அருளானந்தம் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளராக இருந்துவருகிறார். இவர், பொள்ளாச்சி முன்னாள் சேர்மன் கிருஷ்ணகுமாருக்கு மிகவும் நெருக்கமானவர். குற்றவாளிகளோடு அ.தி.மு.கவின் தற்போதைய பொள்ளாச்சி வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இருக்கும் புகைப்படம் பரவி மக்களை வெகுண்டெழச் செய்தது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு தலைமைதாங்கிய ஜெயராமன் மீண்டும் போட்டி - பாடம் கற்பிக்க தயாராகும் மக்கள்!

பொள்ளாச்சி கொடூரத்திற்குத் துணைபோன பொள்ளாச்சி ஜெயராமனுக்கு மீண்டும் அதே தொகுதியில் வாய்ப்பளித்த எடப்பாடி பழனிசாமியின் கேடுகெட்ட ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். ஜெயராமன் வரும் தேர்தலில் தோற்கடிக்கப்படுவதோடு, இவர்களால் வல்லுறவுக்கு ஆளான பெண்களுக்குப் பாதுகாப்பும் நீதியும் கிடைக்கவேண்டும் என்பதே பொள்ளாச்சி மக்களின் எண்ணமாக இருக்கிறது.

- நிதர்சன் உதயா

banner

Related Stories

Related Stories