தமிழ்நாடு

பேறுகால விடுமுறை 12 மாதம், உதவித்தொகை, பாதுகாப்பு என பெண்களுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

பேறுகால விடுமுறை 12 மாதம், உதவித்தொகை, பாதுகாப்பு என பெண்களுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது.

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று, 173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

இந்த அறிக்கையில் பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் :

1. அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் ஆக்கப்படும்.

2 . பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் களைய சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

3. 32 லட்சம் ஆதவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத் திறனாளிகள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக ஆக்கப்படும்.

4. மகளிருக்கு பேறுகால உதவித் தொகை 24 ஆயிரமாக உயர்த்தப்படும்.

5. அரசுப் பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்.

6. சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடி தேடி மருத்துவ வசதி வரும்.

7. கணவரால் கைவிடப்பட்ட மற்றும் கைம் பெண்களில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

8. 35 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத, ஆதரவற்ற மகளிருக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

9. மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

banner

Related Stories

Related Stories