தமிழ்நாடு

படிக்க நினைத்த மாணவியின் கனவை சிதைத்து கூலித்தொழிலாளியாக்கிய கல்லூரி : பதில் சொல்லுமா நிர்வாகம்?

அரசு கல்லூரியின் தவறான வழிகாட்டுதலால் பட்டப்படிப்பை தொடர முடியாமல் பெற்றோருடன் கேபிள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டுவரும் மாணவி.

படிக்க நினைத்த மாணவியின் கனவை சிதைத்து கூலித்தொழிலாளியாக்கிய கல்லூரி : பதில் சொல்லுமா நிர்வாகம்?
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் மாவட்டம், மங்களுரு ஒன்றியத்திற்குட்பட்ட வீ.சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி -சின்னபொண்ணு தம்பதியினர். இந்த தம்பதிக்கு துரைராஜ் மகனும், சத்யாதேவி மகளும் உள்ளனர். ராமசாமியும், சின்னபொண்ணுவும் ஈரோட்டில் தங்கி கேபிள் பதிக்கும் ஒப்பந்ததாரரிடம் தினக்கூலியில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த தம்பதியினர், குடும்ப வறுமையிலும், மகன் துரைராஜை டிப்ளமோ வரையும், மகள் சத்தியாதேவியை பன்னிரெண்டாம் வகுப்பு வரையும் படிக்க வைத்துள்ளனர். சத்தியாதேவி பன்னிரெண்டாம் வகுப்பில் 382 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

மேலும் விவசாயத்தில் பட்டப்படிப்பு படிக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு அக்ரி படிப்பில் சேருவதற்கு யாரும் சரியாக வழி நடத்தாததால், ஈரோட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் சத்தியாதேவி சேர்ந்துள்ளார்.

இந்த கல்லூரியில், அக்ரி பாடப் பரிவு இல்லாததால், சத்தியாதேவியை மைக்ரோ பயாலஜி எடுத்துப் படிக்குமாறு கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இதனால் சத்யா தேவியும் வேறு வழியின்றி, மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார்.

படிக்க நினைத்த மாணவியின் கனவை சிதைத்து கூலித்தொழிலாளியாக்கிய கல்லூரி : பதில் சொல்லுமா நிர்வாகம்?
Kalaignar TV

ஆனால், கல்லூரி தொடங்கும் போது, மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவிற்குப் பதிலாக பயோ கெமிஸ்ரி பாடப் பிரிவில் சேர்த்து விட்டதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாணவி சத்யாதேவி கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால் இதற்கு நிர்வாகம், நாங்கள் கொடுத்த பாடப் பிரிவில் தான் படிக்க வேண்டும் என வற்புறுத்தியிருக்கிறார்கள்.

இதனால் வேறுவழி தெரியாமல், சத்தியாதேவி கல்லூரி நிர்வாகம் கொடுத்த பயோ கெமிஸ்ட்ரி பாடப்பிரிவிலேயே சேர்ந்துள்ளார். மாணவியின் கல்வி செலவிற்காக, இவரின் பெற்றோர்கள் கடன் வாங்கி, முதலாம் ஆண்டு கல்விக் கட்டணமாக ரூபாய் 22 ஆயிரமும், பேருந்து கட்டணமாக ரூபாய் 7 ஆயிரம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மாணவி சத்தியாதேவியும் பயோ கெமிஸ்ட்ரியில் சேர்ந்து, முதல் பருவ தேர்வையும் எழுதியுள்ளார். ஆனால் தேர்தல் முடிவு சத்தியாதேவிக்கு வரவில்லை. இது குறித்து அவர் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். இதற்கு கல்லூரி நிர்வாகம், பன்னிரெண்டாம் வகுப்பில் வேதியியல் பாடம் படிக்காத நிலையில் பயோ கெமிஸ்ட்ரி படிப்பைத் தொடர முடியாது என சர்வ சாதாரணமாகக் கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சத்தியாதேவி நிர்வாகத்திடம் கண்ணீர் மல்க பல முறை படிப்பை தொடர வேண்டும் என கேட்டபோதும், அவர்கள் மாணவியைக் கல்லூரியில் சேர்க்கவில்லை. மேலும் மாணவி செலுத்திய கல்லூரி கட்டணத்தின் முழு தொகையைக் கொடுக்காமல், ரூபாய் 11 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளனர்.

படிக்க நினைத்த மாணவியின் கனவை சிதைத்து கூலித்தொழிலாளியாக்கிய கல்லூரி : பதில் சொல்லுமா நிர்வாகம்?
Kalaignar TV

இதனால், பிடித்த பாடத்தைப் படிக்க வில்லை என்றாலும், பட்டப்படிப்பு கனவாவது நிறைவேறும் என ஆசையிலிருந்த சத்தியாதேவியின் கனவை கல்லூரி நிர்வாகம் அலட்சியமாகச் சிதைத்துவிட்டது. வேறு கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கப் பணம் இல்லாததால், பெற்றோருடன் சேர்ந்து கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

"அக்ரி படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். எங்கள் குடும்பத்தில் படித்தவர்கள் யாரும் இல்லாததால், எனக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை. இதனால் ஈரோடு கலைக் கல்லூரியில் வேறு பாடப்பிரிவில் சேர்ந்து படித்தேன். என்னை படிக்க வைக்க பெற்றோர் கடன் வாங்கினர்.

முதல் பருவத் தேர்வு எழுதிய பிறகு, என்னை போன்று நான்கு மாணவிகளைக் கல்லூரி நிர்வாகம் நிறுத்திவிட்டது. இதனால் வாங்கிய கடனை அடைப்பதற்காகப் பெற்றோருடன் சேர்ந்து கேபிள் பதிக்கும் கூலி வேலையை செய்து வருகிறேன்" என வேதனையுடன் சத்தியாதேவி கூறியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories