தமிழ்நாடு

“மினி கிளினிக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது” - அதிமுக அரசால் தவிக்கும் சுகாதார ஊழியர்கள்!

மினி கிளினிக்கில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டார்கள் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

“மினி கிளினிக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது” - அதிமுக அரசால் தவிக்கும் சுகாதார ஊழியர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி குறித்து மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அரசு மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் தற்போது வரை 33 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், நாளையிலிருந்து இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்தார்.

சென்னையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஒரு வார காலத்திற்குள் முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், சென்னையில் 20 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும், தினமும் 10 ஆயிரம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், அடுத்தடுத்த நாட்களில் அரசு ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் மது அருந்த கூடாது என்றும் கூறினார். இருப்பினும் இது மருத்துவ ரீதியில் உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, சென்னையில் அனைத்து வார்ட்டுகளிலும் விரைவில் அம்மா மினி கிளினிக் திறக்கப்படும் என்ற அவர், மினி கிளினிக்கில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என எவரும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள் என சுகாதாரத்துறை அறிவித்திருப்பதாகவும், தமிழகம் முழுவதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories